திருமூர்த்திமலையில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை அமைக்கும் பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் பகுதியில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.



அதன்படி, தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு கொண்டார்.

இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராமராஜ், தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....