"பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை உயர்த்த விரும்பாதவர் ஜெயலலிதா" -முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்


தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பை கடைசி வரை விரும்பாதவர் ஜெயலலிதா எனவும், தற்போதைய பினாமி அரசு வரியை உயர்த்திருப்பது தவறான கொள்கை முடிவு என முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நாளை காலை 11 மணக்கு ஓ.பி.எஸ் அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும், தங்கள் அணிக்கு வெற்றி வாய்பிருப்பதாகவும் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில், சட்டமன்றத்தில் மறைமுக வாக்கெடுப்பிற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை உணர்ந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும் என்றார். 

பொதுச்செயலாளர் தேர்தல் நீதிமன்ற உத்திரவு படியோ தேர்தல் ஆணைய உத்திரவுபடியோ நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், வெகுவிரைவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்வு அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்குகள் கேட்கப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களின் ஆவல் எனவும் தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக தங்களுக்கு ஜெயலலிதா ஆன்மாவின் ஆசியுடன் கிடைக்கும் என நம்புவதாக கூறிய அவர், கல்வி துறையின் செயல்பாடுகள் ஜெயலலிதா விரும்பிய படி இருக்க வேண்டும் எனவும் பல சவால்கள் கல்வித்துறை முன்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...