மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு – பேரனுடன் சென்றபோது விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

திருப்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து பேரனுடன் சென்ற மூதாட்டி வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி சரோஜா (வயது 60). கைத்தறி தொழிலாளி. கடந்த 7-ந் தேதி சரோஜா தனது பேரன் யோககுமாருடன் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

குண்டடம் பஸ் நிறுத்தம் முன்பு சென்றபோது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த சரோஜா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...