மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாமக மனு

மைவி3 ஏட்ஸ் நிறுவனம் மட்டுமல்லாது, அந்நிறுவனத்தின் பின்புலமாக செயல்படும் குருஜி என்கிற விஜயராகவன் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாமகவினர் மனு அளித்தனர்.


கோவை: விளம்பரம் பார்த்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஒருங்கினைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கபட்டது.



அம்மனுவில் மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவருவதுடன் காவல்துறையினரையும் மிரட்டும் உரிமையாளர் என கூறிக்கொள்ளும் சக்தி ஆனந்த் மட்டுமல்லாது அந்நிறுவனத்தின் பின்புலமாக செயல்படும் குருஜி என்கிற விஜயராகவன் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும், இந்நிறுவனத்தால் ஏமாற்றபட்ட மக்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் கிடைக்க வேண்டியும், அந்நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ், கடந்த 5 மாதங்ளாக மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வரும் மைவி3 நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் பேசி தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிறுவனத்தின் மீது புகாரளித்த கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மீது சமுக வலைதளங்களில் தனி நபர் தாக்குதல் நடத்தபடுவதாகவும், உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.

மேலும் கோவை மாவட்ட பாமக மணல் கொள்ளை, செங்கல் சூளை, கனிம வள கொள்ளை மற்றும் நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது பல மோசடிகளை கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவித்தவர். மைவி3 நிறுவன விவகாரத்தில் மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதியின் பின்னால் கண்டிப்பாக பாமக நிற்கும் எனவும் தெரிவித்தார். இதில் கோவை மாவட்ட செயலாளர்கள் கோவை ராஜ், வீரான் ராவுத்தர் உள்ளிட்ட பாமகவினர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...