கோவை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு நொய்யல் படித்துறையில் 26-ம் ஆண்டு நினைவு அஞ்சலி

கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14 ல், கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் பலியாகினர். குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறந்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டு, நொய்யல் படித்துறையில் திதி கொடுக்கப்பட்டது.


கோவை: கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் மொட்டை அடித்து, திதி கொடுத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1998, பிப்ரவரி 14-ல், கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் பலியாகினர்.



குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறந்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டு, நொய்யல் படித்துறையில் திதி கொடுக்கப்பட்டது.



விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, நொய்யல் படித்துறையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் கூறும்போது, தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும், பயங்கரவாத செயல் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்று வருகின்ற தலைமுறைக்கு இதனை தெரியப்படுத்த வேண்டும் என்று இன்று மாலை 3:52 மணிக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எந்த இடத்திலே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோ அந்த இடத்திலே நினைவுத் தூணையும் அமைக்க வேண்டும் என்றும், வரலாற்றை மறந்தால் அந்த நாடு முன்னேற முடியாது என்றும் இந்த பயங்கரவாத செயல்களில் பலியானவர்களுக்கு ஆர்.எஸ் புரம் பகுதியில் நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...