விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து ஏமாற்றியதாக 30க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்

கோவை வடவள்ளியில் விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி அந்த நிறுவனத்திடம் வீடு வாங்கி ஏமாந்தத 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.


கோவையை அடுத்த வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியில் ஸ்ரீ தக்‌ஷா என்ற நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3௦ க்கும் மேற்பட்டோர் வீடு வாங்கி குடியேறியுள்ளனர். இந்நிலையில் அந்த நிறுவனம் விதிகளை மீறி கட்டிடம் கட்டி விற்பனை செய்துள்ளதாகவும், நிறுவனம் செய்த தவறால் தங்களுக்கு தற்போது அதிகாரிகள் அபராதம் விதிப்பதாகவும் வீடுகளை வாங்கியவர்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து அடிக்குமாடி குடியிருப்பை கட்டிக் கொடுத்த தக்‌ஷா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி நிர்வாகம்  மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையிலும் தக்‌ஷா நிறுவன தரப்பின்னர் பங்கேற்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமடைந்த  குடியிருப்புவாசிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை எனவும், மின் கட்டணத்திற்கு கூடுதலாக வரி என்ற பெயரில் வசூல் செய்வதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கோரிக்கைகள் குறித்த மனுவினை ஆட்சியரிடம் அளித்த அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...