சிவராத்திரியை முன்னிட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் ஆணிக்கால் காலணி முள்படுக்கை திருவிழா

அதிகாலையில் மகாலட்சுமி சுவாமி முன்பாக பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து வானவேடிக்கையுடன் ஆதிவாசி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து சாமிகளை கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதில் பலர் சாமி வந்து அருள்வாக்கு கூறினர்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் மற்றும் ஆணிக்கால் காலணியுடன் பூசாரி நடந்து செல்லும் முள்படுக்கைத் திருவிழா நடைபெற்றது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன் பாளையத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது பூச்சியூர் கிராமம். இங்கு, ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கும். இங்குள்ள 400 ஆண்டுகள் பழமையான வீரபத்திரசாமி, மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி, இறைவனை வழிபடுவர்.



இதில் சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர். இதே போல் இந்த ஆண்டும் வழக்கம் போல, பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலையில் மகாலட்சுமி சுவாமி முன்பாக பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.



தொடர்ந்து வானவேடிக்கையுடன் ஆதிவாசி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து நடனமாடி சாமிகளை கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதில் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட பலர் சாமி வந்து அருள்வாக்கு கூறினர்.



தொடர்ந்து கோவில் பூசாரி வீரபத்திர சுவாமி முன்பாக கால்பாதங்களை நோக்கி கூர்மையான ஆணிகள் உடைய மரக்கட்டையால் ஆன காலணிகளை அணிந்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தார். இந்த விழாவில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...