பி.எஸ் III ரக வாகனங்களுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்- விற்றுத் தீர்த்த விற்பனையாளர்கள்

நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) III என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.

இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-IV விதிமுறை, 2010 முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் உற்பத்தியை தான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.

ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் III விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த மனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் இதேபோல முறையே பி.எஸ்.II மற்றும் பி.எஸ்.III என்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல் பி.எஸ்.III வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.III வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிப்பதாக அறிவதி்துள்ளது. மார்ச் 31 (இன்று) இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.

அதன்படி கோவையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 25 இருசக்கர வாகன விற்பனை முகவர்கள் வசமிருந்த சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் நேற்று துவங்கிய அதிரடி சலுகை விற்பனையில் விற்கப்பட்டுள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மேட்டுப்பாளையம் மற்றும் நேரு மைதானம் ஆகிய பகுதியில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் வைத்துள்ள சுகுணா மோட்டார்ஸ் நிறுவனதினர் கூறுகையில், உச்சநீதிமன்றம் தற்போது பி.எஸ்.III ரக இன்ஜின் உள்ள வாகனங்களுக்கு தடை விதித்துள்ளதால் விற்பனையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. உற்பத்தியாளர்களுக்கே பெரியளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தடையினை தொடர்ந்து பி.எஸ்.IV ரக வாகனங்கள் வர உள்ளன. 

மேலும், தடை செய்யப்பட்டுள்ள பி.எஸ்.III ரக வாகனங்களை இன்று இரவுக்குள் பதிவு செய்திட வேண்டும். ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் அந்த வாகனங்களை பதிவு செய்ய முடியாது' என தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...