மேட்டுப்பாளையம் அருகே எரிந்த நிலையில் பிணம்- காவல்துறையினர் விசாரணை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மாதேஸ்வரன் மலையருகே ஆட்டோ நகர் பகுதியில் ஆடு மேய்பதற்காக வந்த பெண் அங்குள்ள மரத்தின் அடியில் எரிந்த நிலையில் பிணம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, காரமடை காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காரமடை போலீஸ் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், கோவை மாவட்ட எஸ்.பி. ரம்யபாரதி, பொறுப்பு டி.எஸ்.பி. குணசேகர் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, காவல்துறையினர் தெரிவிக்கையில், 80 சதவிகிதம் எரிந்த நிலையில் இருக்கும் இந்த சடலம் பெண்ணாக இருக்கலாம் என்றும், வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டுவந்து எரித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், எரிந்த நிலையில் பிணத்தை எடுத்து வந்த வாகனத்தின் டயர் தடயம் மற்றும் தனித் தனியே வெவ்வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட எரிந்த உடலின் கால்கள் ஆகியவற்றைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...