பயணச்சீட்டு கேட்ட நடத்துனருக்கு கத்திகுத்து- ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் ஆத்திரம்



பயணச்சீட்டு வழங்குவதில் பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே காவலரை பிடித்த காந்திபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவையை நோக்கி இன்று காலை அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது. இதில்  கோவை போத்தனூர் ரயில்வே காவலர் சிவராமசந்திரன் கோவை உக்கடத்திற்கு பயணச்சீட்டை பெற்று பயணம் செய்துள்ளார்.

பின்னர் பேருந்து உக்கடம் பேருந்து நிலையம் வந்தபின்னர் நடத்துனர் பாண்டியராஜன், காவலர் சிவராமசந்திரன் வாங்கிய பயணச்சீட்டு உக்கடம் வரை மட்டுமே செல்லும் என்றும், காந்திபுரம் செல்லவேண்டுமானால் மீண்டும் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு சிவராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியநிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே வரும் போது கோபம் அடைந்த காவலர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டியராஜன் காலில் குத்தியுள்ளார்.

இதனைக்கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர். உடனே பேருந்து ஓட்டுனர் காட்டூர் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து கத்திக்குத்தில் காயமடைந்த நடத்துனர் பாண்டியராஜனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து, ரயில்வே காவலர் சிவராமச்சந்திரனை காட்டூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...