கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிக்காக 6 பெரிய வேப்ப மரங்கள் இடமாற்றம்

கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிக்காக அவ்விமான நிலைய வளாகத்தில் இருந்த மரங்களை வெட்ட நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மரங்களை முழுவதும் வெட்டிவிடாமல் மறுவாழ்வு அளிக்க முடிவு செய்த விமான நிலைய இயக்குநர் வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இத்தகவலையடுத்து மரங்களை வேருடன் அகற்ற ஓசை அமைப்பினரை வனத்துரை அதிகாரி பரிந்துரை செய்ததையடுத்து ஓசை அமைப்பின் சையது தலைமையிலான குழுவினர் கடந்த திங்களன்று முதல் விமான நிலைய வளாகத்தில் இருந்த பெரிய வேப்பமரங்களை இடமாற்றம் செய்ய முடிவுசெய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி விமான நிலைய அதிகாரிகளே மரங்களை மாற்று இடத்தில் நட விமான நிலைய வளாகத்தில் 350 மீட்டர் தொலைவில் இடமும் ஒதுக்கித்தந்துள்ளனர்.



இதைத்தொடர்ந்து, ஜேசிபி, கிரேன், டிரேக்டர் உள்ளிட்டவற்றின் உதவியுடன் கடந்த திங்களன்று துவங்கப்பட்ட பணியில் ஒரு வேப்ப மரம் இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 12) இரண்டு மரங்களை இடம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சையது கூறுகையில், மரங்களை எழிதில் அழித்து விடலாம். ஆனால், ஒரு மரம் வளர பல ஆண்டுகள் ஆகும். அவை நமக்கு பல வகையில் உதவிவருகின்றன. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட இருந்த நிலையில், விமான நிலைய இயக்குநர் தொடர்புகொண்டு மரங்களை மாற்று இடத்தில் நட உதவிகோரினார். 

அதன்படி, 6 வேப்ப மரங்களை இடமாற்றம் செய்து மறுவாழ்வு அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, ஓசை அமைப்பில் இருந்து ஞானகுரு, செந்தில்குமார், ஊமாசங்கர், ஆன்டனி உள்ளிட்ட பலர் இணைந்து மரங்களை வேருடன் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மரங்கள் இடமாற்றும பணியில் நம் உள்நாட்டு மரங்கள் மட்டுமே இடமாற்றம் செய்து மறுவாழ்வு அளிக்கப்படவுள்ளது

மரத்தின் வேரினை அகற்றும் போது ஏதேனும் மாறாக நடைபெற்றால் அந்த மரம் வளர்வதில் பாதிப்பு ஏற்படும் என்பதால் நிதானமாக மரங்களை அகற்றி வருகிறோம். 

கடந்த திங்களன்று ஒரு மரம் அகற்றப்பட்ட நிலையில் இன்று இரண்டு மரங்களும் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் மீதமுள்ள மூன்று மரங்களையும் அகற்றி மாற்று இடத்தில் நடவுள்ளோம்.

இம்மரங்கள் ஆரோக்கியமாக வளர மண்புழு, சாணம், வக்கிப்புல், தென்னை நார் உள்ளிட்ட இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இம்மரங்கள், இடம்மாற்றம் செய்தபின் 60 முதல் 90 நாட்களில் துளிர் விட்டு வளரத்துவங்கிவிடும் " என்றார்.

முன்னதாக, இப்பணியின் துவக்க நிகழ்ச்சியில், சிறுதுளி அமைப்பின் வனிதா மோகன், மணியன், ராக் ரவீந்திரன், ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாஸ், கோவை விமான நிலைய இயக்குநர் ஆகியோர் பார்வையிட்டு முன்னிலை வகித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...