பொது இடத்தில் மது அருந்தும் குடிமகன்கள்!


நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருக்கும் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவையடுத்து கோவையில் 180 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. 

நகரின் முக்கிய இடங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள் ஊர்களுக்குள் இருக்கும் டாஸ்மாக்குகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதிகமான வாடிக்கையாளர்கள் வருவதால் தற்போது டாஸ்மாக் முன்பு ‘கியூ’ நிற்க தொடங்கியுள்ளது. 



இதில் கோவை ஜீ.வி. ரெசிடென்சி பகுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்மாக்கின் அருகே அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. மாலை நேரத்தில் மது அருந்த வரும் குடிமகன்கள், சரக்கை வாங்கி விட்டு அந்த காலி இடத்தை ஆக்கிரமித்து விடுகின்றனர். 

சிங்காநல்லூரில் இருந்து ஹோப்ஸ் செல்லும் சாலையில் தற்போது பாதாள சாக்கடை பணி நடப்பதால், அவினாசி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலும் ஜீ.வி. ரெசிடென்சி சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். 



இந்த நிலையில், பொது இடத்தில் மது அருந்தும் குடிமகன்கள் போதையில் பாட்டில்களை சாலை நடுவே போட்டு உடைக்கின்றனர். இதனால் மாலை நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த டாஸ்மாக்கிற்கு வருபவர்கள் மசக்காளிபாளையம் செல்லும் சாலையின் இருபுறமும் வாகனகளை நிறுத்திவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 

கண்டுகொள்ளாத காவல்துறை?

இந்த டாஸ்மாக் கடைக்கு அதிக அளவில் கூட்டம் வருவதை அறிந்த போலீசார், கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மறைந்து நிற்கின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து அனுப்பிவிடுகின்றனர். ஆனால், பொது இடத்தில் மது அருந்துபவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...