தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பாடைசுமந்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, கோவையில் பாடை சுமந்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது செய்யப்பட்டனர். 



வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக கோவை இரயில் நிலையம் முன்பாக டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி, ஒரு மாணவரை பாடை போல எடுத்து வந்து போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். 

மேலும் விவசாயிகள் வங்கிகடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இரயில் நிலையத்திற்குள் சென்று இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...