பீளமேடு ரயில்வே பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடிஏற்றி போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைக்காததை கண்டித்து அப்பகுதியில் உள்ள ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் மேம்பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் செல்ல தனியாக பாதை ஏற்படுத்தாமல் ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகள் வழியாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து இன்று பீளமேடு முருகன் நகர், ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடிகளில் கருப்பு கொடி ஏற்றி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் எனவும், பீளமேடு ரயில் நிலையத்தில் இருந்து கனரக வாகனங்களை குடியிருப்பு பகுதிகள் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதை ரயில்வே நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...