சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: காவல்துறைக்கு சவால் - கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவையில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு குறித்தும், காவலர்களுக்கான மருத்துவ முகாம் பற்றியும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் சைபர் குற்றங்கள் விசாரணை குறித்தும் விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறைக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு சவால் என்று தெரிவித்துள்ளார். அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசிய அவர், சைபர் குற்றங்கள் குறித்து வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடத்தப்பட்ட இந்த முகாமில், ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் தொடர்பான மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. காவலர்களின் உடல்நல ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.



மேலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி பொதுமக்களுக்கென பிரத்யேக வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் பாலகிருஷ்ணன் உறுதியளித்தார்.

சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அதையும் தாண்டி சிலர் ஏமாந்து விடுவதாகவும் கவலை தெரிவித்த அவர், இது போன்ற வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்றும் உறுதியளித்தார்.



முகாம் துவக்க நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் சரவணன், சுகாசினி, உதவி ஆணையர் சேகர், ஸ்வர்கா பவுண்டேஷன் தாளாளர் தினேஷ் குமார் பாண்டியா, நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா, தாளாளர் குருபிரசாத் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...