கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு விமான சேவை ஜூலை 16 முதல் மீண்டும் தொடக்கம்

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான சேவை, தேவையான பரிசோதனை கருவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதால், ஜூலை 16 முதல் மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் அறிவித்தனர்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான போக்குவரத்து சேவை வருகின்ற ஜூலை 16 முதல் மீண்டும் செயல்படும் என்று கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கான உள்நாட்டு சரக்கு போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மத்திய விமான பாதுகாப்பு கழகத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான தேவையான பரிசோதனை சாதனங்கள் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது.



இந்த நிலையில், தற்போது தேவையான பரிசோதனை கருவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கோவை விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், முறையான அனுமதி பெற்று கோவை விமான நிலையத்திலிருந்து பிற நகரங்களுக்கு 100 சதவீதம் சான்று பெற்ற சரக்குகளை அனுப்ப முடியும் என்றும், இந்த சேவை வருகின்ற ஜூலை 16 தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சரக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை உடனுக்குடன் அனுப்ப முடியாமல் இழப்பை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சினை குறித்து பல வர்த்தக அமைப்புகள் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமான நிலைய ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...