கோவையில் வளர் இளம் பருவத்தினரின் நலன் குறித்த தென்மண்டல கருத்தரங்கம்

கோவையில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமி சார்பில் வளர் இளம் பருவத்தினரின் உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தென்மண்டல அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமி சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் உடல் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தென்மண்டல அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் நிர்வாகிகளான டாக்டர் இஸ்மாயில், டாக்டர் லட்சுமி சாந்தி மற்றும் டாக்டர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.



வளர் இளம் பருவத்தினருக்கு, குறிப்பாக 10 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் நலம் மற்றும் மனநல பிரச்சினைகள் குறித்தும் அதற்குரிய தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் விளக்கப் படங்களுடன் பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.



குறிப்பாக செல்போன் பயன்படுத்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல்ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகளை எப்படி மருத்துவர்கள் அணுக வேண்டும் என்பது குறித்தும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...