கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் தாக்குதல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுப்பு

கோவை பூச்சியூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார். போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூச்சியூரில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குடியிருப்பில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் சங்கர் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக சங்கர் குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவதோடு, தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.



சமீபத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில், சங்கர் அங்கு பணிபுரியும் வேலைக்காரப் பெண் மற்றும் பாதுகாவலரை தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் குடியிருப்பாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் சங்கர், கண்ணாடிகளை உடைத்து ஊசி எறிவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், வீட்டின் கதவுகளை அடிக்கடி தட்டுவதால் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...