அவிநாசி சாலையில் வேகத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன - கோவை மாநகர காவல் ஆணையர்

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த NANCY குறும்படம் வெளியிடப்பட்டது. அவிநாசி சாலையில் வேகத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட NANCY குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த குறும்படத்தை வெளியிட்டார்.



அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் கூறியதாவது, "கோவை மாநகரை, சாலை பாதுகாப்புக்கு முன்மாதிரியாக அறிவித்து, முதல்வர் இந்த பட்ஜெட்டில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கோவை மாநகர காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பை மையமாகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று, தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, NANCY என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது."

சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாவது குறித்து, "பெற்றோர்கள், 18 வயது நிரம்பாத தங்களுடைய குழந்தைகளுக்கு வாகனங்களை ஓட்ட கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகும்போது பெற்றோர்களின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயது நிரம்பினாலும் முறையான பயிற்சிக்குப் பின்பே வாகனங்களை இயக்க வேண்டும்." என்றார்.

வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு குறித்து, "அவிநாசி சாலையில் வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 கிலோமீட்டர் மேல் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்காக திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்றார்.

ரோந்து பணியின் போது காவலர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வது குறித்து, "காவலர்களைப் பொறுத்தவரை பணியில் சேரும்போதே துப்பாக்கிச் சுடுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் புத்தாக்க பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. சட்டத்திற்கு உட்பட்டு எந்த சூழலில் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது." என்றார்.

ரவுடிகள் பற்றிய கண்காணிப்பு குறித்து, "ரவுடி பட்டியலில் உள்ளவர்களை பொருத்தவரை, மாதம் ஒருமுறை அவர்களை கண்காணித்து, சட்டத்திற்கு உட்பட்டு தான் அவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வு செய்து, அந்தப் பதிவுகளை சேகரித்து வர வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. அதன் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்." என்றார்.

ராட்மேன் மூர்த்தி வழக்கு குறித்து, "ராட்மேன் என்ற மூர்த்தி மீதான கொள்ளை சம்பவம் குறித்த போலீஸ் விசாரணை முடிவுற்றது. விசாரணையில் மூர்த்தி மற்றும் அவரது குழுவினர் மீது தமிழகம் முழுவதும் 73 வழக்குகள் இருப்பதும் அனைத்து வழக்குகளையும் சேர்த்து ஏறத்தாழ 1500 சவரன் தங்கம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே மூர்த்தியின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் இரண்டு பேர் சரணடைந்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டி உள்ளது. பொருட்களை இழந்த மக்களுக்கு பொருட்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுத்து வருகின்றோம்." என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...