கோவை குனியமுத்தூரில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

கோவையின் குனியமுத்தூரில், 35 வயதான யோகேஷ் என்ற வாலிபர் குடும்ப வறுமை காரணமாக வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Coimbatore: கோவை குனியமுத்தூரை சேர்ந்த யோகேஷ் (35) என்ற வாலிபர், குடும்ப வறுமை காரணமாக வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யோகேஷ் பிஇ பட்டதாரியாக இருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி சுகன்யா (35). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஆனால், யோகேஷ் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த யோகேஷ், வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், யோகேஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...