மீன் பிடிக்க அனுமதி கோரி வலைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மீனவர்கள்

கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதி மீனவர்கள் வலைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளிக்க வந்தனர்.

மீனவர்கள் தங்கள் மனுவில், பல ஆண்டுகளாக கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் மீனவர்களாக மீன்பிடித்து வருவதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மீன் பாசி குத்தகை உரிமம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். குத்தகை உரிமை முடிந்தவுடன் அனைத்து மீனவர்களும் சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் மீன் பிடித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



தற்போதைய கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் பாலமுருகன், சில மீனவர்களுடன் சேர்ந்து கொண்டு குறிப்பிட்ட சில குளங்களில் மீன்பிடிக்க அனுமதி தர மறுப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தக் குளங்களில் மீன்பிடிக்க சென்றால் பாலமுருகன் தங்களை அச்சுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பெரும்பான்மையான மீனவக் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் கோவை வட்ட மீனவர் சங்க உறுப்பினர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...