தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியது. 1000 தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன.


Coimbatore: கோவையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமருக்கு 10,000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இது குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.



அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தபால் நிலையத்திலிருந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற 1000 தபால் அட்டைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈசுவரன் கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளில், மொழிகளின் வளர்ச்சிக்காக இந்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில், 25 ஆயிரம் பேர் மட்டுமே தாய் மொழியாக கொண்ட சமஸ்கிருதத்திற்கு 61% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் புறக்கணித்துவிட்டு, அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவை சமஸ்கிருத நாடாக மாற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்," என்றார்.



"அடுத்த ஐந்தாண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ் மொழிக்கு அதிகமான நிதி ஒதுக்கி தமிழ் மொழியை உலகம் எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடத்திலும் கையெழுத்து பெற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து தபால் அட்டைகளை அனுப்பவுள்ளதாகவும் ஈசுவரன் தெரிவித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...