மடத்துக்குளம் அருகே மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் அவதி: அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் திட்டமிடல் குறைபாடு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அடிப்படை வசதிகள் இன்மையும், போக்குவரத்து நெரிசலும் மக்களை அவதிக்குள்ளாக்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிகழ்வில் மடத்துக்குளம் வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரின் சரியான திட்டமிடல் இல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபம் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும், துங்காவியில் இருந்து கோட்டமங்கலம் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்வுக்கு வந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், விபரம் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணன், பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களுக்கு டோக்கன் வழங்கினார். மேலும், உடுமலை பகுதியில் இருந்து தேவையான கூடுதல் இ-சேவை மையங்களை துங்காவி கிராமத்திற்குக் கொண்டு வந்தார்.



இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், மகளிர் உரிமைத் தொகை கோரி அதிக அளவிலான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். ஆனால், அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முக்கியமான துறை அதிகாரிகள் வராததால் பல பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...