கோவையில் SDTU மண்டல மாநாடு: பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்க வலியுறுத்தல்

கோவையில் செப்டம்பர் 22 அன்று SDTU மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் திரும்பப்பெறுதல், பொதுத்துறை நிறுவனங்கள் மீட்பு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.



Coimbatore: சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) சார்பில் கோவையில் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் லோகோ வெளியீட்டு விழா கோவை மாவட்ட SDPI அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஸ்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வலியுறுத்தப்படும் முக்கிய கோரிக்கைகளாக, புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை மீட்டு அரசே நடத்துதல், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட 6 அம்சங்கள் அடங்கும். இந்த மாநாடு செப்டம்பர் 22 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

ரவூப்நிஸ்தார் பேசுகையில், "மோடி அரசு தொழிலாளர் விரோத போக்குடன் பல சட்டங்களை திருத்தியுள்ளது. 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்," என்றார்.

மேலும், "தமிழகத்தில் 56 இடங்களில் SEZ அமைக்கப்பட்டுள்ளது. இவை தொழிலாளர்களை பாதிக்காத வகையிலும், இயற்கைக்கு இடையூறு இல்லாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் கோவை மண்டலத்தின் சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து பேசுகையில், "முந்தைய அரசுகள் 360 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கின. ஆனால் தற்போதைய அரசு 60 நிறுவனங்களை தனியாருக்கு விற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்காமல் புதியவற்றை உருவாக்க வேண்டும்," என்றார்.

வேலையில்லா பிரச்சினை குறித்து, "CMIE அறிக்கையின்படி 48% இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கக் கூடாது," என்று வலியுறுத்தினார்.

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்," என்றார்.

மாநாட்டில் 4000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...