கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள், கால்கள் வழங்கும் முகாம்

கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாமை நடத்துகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் பங்கேற்க உள்ளனர்.


Coimbatore: கோவையில் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த முகாமை நடத்துகிறது.

இந்த முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர். உதய்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு, இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாகப் பொருத்தும் முகாம்களை நடத்தி வருகிறது.



தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கைகள் அமைப்பதற்கான அளவீடு எடுக்கும் முதல் கட்ட முகாம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

அளவீடுகள் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக் குழுவினரின் உதவியுடன் செயற்கை கால் மற்றும் கைகளைப் பொருத்தும் முகாம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பகவான் பிரசாந்த் கவுர் கூறுகையில், "செயற்கை கால் மற்றும் கைகள் அளவீடுகள் கொடுத்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

முன்னதாக முகாம் தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியை தன்னார்வலர்கள் சந்தோஷ் முண்டாடா, கமல் கிஷோர், கவுர் ஆகியோர் வெளியிட்டனர்.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...