கோவை சவுரிபாளையம் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

கோவையில் சவுரிபாளையம் அருகே கல்லூரி மாணவர் விஸ்வநாதன் மீது 5 பேர் தாக்குதல் நடத்தினர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவத்தில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை சவுரிபாளையம் ரோட்டில் உள்ள ஜிம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மீது 5 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள சின்னக்குப்பம், கோபிநாதன் பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் விஸ்வநாதன் (20) கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

விஸ்வநாதனின் தம்பி சபரியை அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சபரி தனது அண்ணன் விஸ்வநாதனிடம் தெரிவித்தார். இதனையடுத்து விஸ்வநாதன், தனது தம்பியை தாக்கிய பழனியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே முன் விரோதம் உருவானது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) சவுரிபாளையம் ரோட்டில் உள்ள ஜிம் அருகில் விஸ்வநாதன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழனி உட்பட 5 பேர் விஸ்வநாதனை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் கல்லூரி மாணவரை தாக்கிய பழனி, கௌதம், அன்பு, சர்ஜித், துவாரகேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...