மாணவர்களின் திறமையை வெளிபடுத்திய 'விங்ஸ் & விண்ட் 2017' ஏரோ மாடலிங் விமான நிகழ்ச்சி


ஸ்கை-ஹை அகாடமி, ஏரோ மாடலிங் ஹாப்பி ஜோன் மற்றும் ஜெட் ஏரோ ஸ்பேஸ் இணைந்து நடத்திய 'விங்ஸ் & விண்ட் 2017' என்னும் 3வது மாவட்ட அளவிலான ஏரோ மாடலிங் போட்டி மற்றும் கோயம்பத்தூரின் பிரதான ஏரோ மாடல் விமான நிகழ்ச்சி சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 6 மணி முதல் துவங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்றது. நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ரகுபதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். 



இது குறித்து ஸ்கை-ஹை அகாடமி நிறுவனர் கௌதம் பேசுகையில்; கோவையில் 'விங்ஸ் & விண்ட் 2017' என்னும் 3வது மாவட்ட அளவிலான ஏரோ மாடலிங் போட்டி மற்றும் ஏரோ மாடல் விமான நிகழ்ச்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு சக் க்ளைடர், கடப்புல்ட் க்ளைடர், கண்ட்ரோல் லைன் ஏரோபாட்டிக், ரிமோட் கண்ட்ரோல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. 



இதில் மாணவர்கள் தயாரித்த மாடல் விமானம் இங்கு கொண்டு வந்து அவர்களில் திறமை வெளிபடுத்தினார். இப்போட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ரகுபதி அவர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்களில் படைபாற்றலின் திறமையை வெளிபடுத்தினர். இப்போட்டியில் கலந்து கொண்டு சிறந்த முறையில் திறம்பட செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் எங்கள் நிறுவனத்தின் சார்பில் வழக்கப்படும். காலை 6 மணி முதல் தொடங்கிய இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெளி மாநிலங்களிருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசுத் தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ஆறுதல் பரிசும், போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ரகுபதி பரிசுப் பொருள்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாணவர்களை பாராட்டினார்.



இதில், ஸ்கை-ஹை அகாடமி நிறுவனர் சுதர்சன், ஏரோ மாடலிங் ஹாப்பி ஜோன் நிறுவனர் சந்திர பாபு மற்றும் ஜெட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனர்கள் பாலா மற்றும் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Newsletter

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...