உடுமலை திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மண்டல பாசனத்திற்காக காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வருகின்றன. முதலாம் மண்டல பாசனம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்காக விவசாயிகள் தண்ணீர் திறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், காண்டூர் கால்வாயின் நல்லாறு பகுதியில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரமான பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து நேற்று மாலை காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.



வினாடிக்கு 523 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையில் தேவையான அளவு தண்ணீர் நிரம்பியதும், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 60 அடியில், 28.47 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...