பாரத் நெட் திட்டத்திற்கு எதிர்ப்பு: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவையில் 228 ஊராட்சிகளில் 191 ஊராட்சிகளில் பாரத் நெட் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது. திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 191 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பாரத் நெட் திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை கேபிள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களின் வழியாக கண்ணாடி இழை கேபிள் கொண்டு செல்ல கூடாது என இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "இந்த திட்டம் முழுமையாக அரசின் திட்டமாகும். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் வழியாக கண்ணாடி இழை கேபிள் கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்ய கூடாது" என்றார்.

மேலும், விளைநிலங்கள் உள்ள மின் கம்பங்களின் வழியாக கண்ணாடி இழை கேபிள்கள் கொண்டு செல்லப்படும் போது பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், கண்ணாடி இழையில் எவ்விதமான உலோக பொருட்களும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். எனவே இந்த திட்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள், கண்ணாடி இழை கேபிள்களை கொண்டு செல்ல தடை விதிக்கும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...