கோவில்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் போக்சோவில் கைது

கோவில்பாளையத்தில் எட்டாம் வகுப்பு மாணவியை மிரட்டி பணம் கேட்டு, பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ரவிக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெற்றோர் புகாரைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது.


Coimbatore: கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் அண்மையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ரவிக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்த மாணவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கினார்.

பின்னர் ரவிக்குமார் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்ற மாணவியிடம் காவலர் ரவிக்குமார் பணம் கேட்டு மிரட்டியதுடன், ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் காவலர் ரவிக்குமார் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காவலர் ரவிக்குமார் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து, அவரை ஆகஸ்ட் 6 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...