ஆழியாறு அணை 6-வது முறையாக நிரம்பியது: 1347 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி ஆழியாறு அணை 6-வது முறையாக நிரம்பியதை அடுத்து, வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணை 6-வது முறையாக நிரம்பியதை அடுத்து, வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், சோலையாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நிரம்பியது.



கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்த போதிலும், நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால், ஆழியாறு அணை 6-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடியை எட்டியது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1225 கன அடியாக இருந்தது.

அணையின் பாதுகாப்பு நலன் கருதி, வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...