பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவு பாதிப்பிற்கு மருத்துவக் குழு அனுப்பி வைப்பு

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அனுப்பப்பட்டது. மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் மருத்துவர் மீரா தலைமையிலான குழு புறப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டது.



கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பொள்ளாச்சி நகர திமுக சார்பில் மருத்துவக் குழு அனுப்பப்பட்டது.



பொள்ளாச்சி நகராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் கலைவாணி கண்ணன் மகள் மருத்துவர் மீரா தலைமையிலான மருத்துவக் குழுவினர் இன்று வயநாடு பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்து, மாத்திரை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு செல்லும் மருத்துவ குழுவினரை பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.



மருத்துவக் குழுவினரின் வாகனத்தை பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...