சிங்கள அரசைக் கண்டித்து கோவையில் பர்னிச்சர் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய அமைப்புகள்

கோவையில் உள்ள பர்னிச்சர் கடையை மூடக்கோரி பெரியாரிய அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்தின. தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழக மீனவர்களை கொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்து கோவையில் உள்ள சிங்களத்தைச் சேர்ந்த பர்னிச்சர் நிறுவனமான பர்னிச்சர் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று பெரியார் இயக்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.



முற்றுகை போராட்டத்தை ஒட்டி பர்னிச்சர் கடை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



இருந்த போதிலும், கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சிங்கள அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பல்வேறு பெரியாரிய இயக்கங்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய அமைப்புகள் பங்கேற்றன. போராட்டக்காரர்கள் பர்னிச்சர் கடையை முற்றுகையிட்டு, சிங்கள அரசின் செயல்களை வன்மையாக கண்டித்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...