கோவையில் பிரம்மாண்ட துபாய் சிட்டி பொருட்காட்சி: புதிய அனுபவம் காத்திருக்கிறது

கோவை துடியலூரில் ஆகஸ்ட் 15 முதல் நடைபெறும் துபாய் சிட்டி பொருட்காட்சி, துபாய் நகரின் அனுபவத்தை வழங்குகிறது. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு அரங்குகள், விற்பனை அரங்குகள் உள்ளன.



Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி. மருத்துவமனை அருகில், ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிரில் பிரம்மாண்டமான "துபாய் சிட்டி" எனும் பொருட்காட்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பொருட்காட்சியில், துபாய் நகரின் அடையாளமான புர்ஜ் அல் அரப் உள்ளிட்ட கட்டிடங்களின் மாதிரிகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அதிசயங்களை தத்ரூபமாக உருவாக்கி, மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது. கோவை வாசிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தப் பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



பொருட்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான துரை, பங்குதாரர் இஸ்மாயில், ஜியாவுல் ஹக் ஆகியோர் கூறுகையில், "துபாய் நாட்டை நேரில் பார்க்காதவர்கள் இந்தப் பொருட்காட்சிக்கு வந்தால், துபாய் நகரில் உள்ளதை நேரில் காண்பது போன்ற அனுபவத்தை பெறுவார்கள்" என்றனர்.

இந்தப் பொருட்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மாண்ட ராட்டினம், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு அரங்குகள் ஆகியவை சிறப்பு கவர்ச்சிகளாக உள்ளன. மேலும், உணவு அரங்குகள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

டி.டி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நடத்தப்படும் இந்த துபாய் சிட்டி பொருட்காட்சி, கோவை மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் கண்காட்சி அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...