கிணத்துக்கடவு: குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு - வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு

கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில், குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி. வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி சொலவம்பாளையம் ஊராட்சியில் முறைகேடான முறையில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சொலவம்பாளையம் ஊராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி ஊராட்சி சார்பில் தண்ணீர் பைப் போடுவதற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள அன்பு நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வேண்டி பல முறை அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதேபோல், வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் அவர்களும் ஊராட்சி தலைவரிடம் பல முறை இது குறித்து வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்காமல், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு கொடுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக கவுன்சிலர் சதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கே முதலில் தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...