கோவை மாநகராட்சி நூலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்தார். இப்பயிற்சி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திலுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி IAS அவர்கள், இன்று (31.08.2024) துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இம்மையத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையிலும் கல்லூரி படிப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் மற்றும் சோசியோ போடென்ட்ஸ் இணைந்து இந்த மாபெரும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கம், நவீன காலத்தில் வேகமாக மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தனிநபர்கள் அவர்களது திறன்களை மேம்படுத்தி, சரியான வேலை வாய்ப்புகளை பெறவும், அவர்களது துறையில் நிபுணத்துவம் அடையவும் உதவுவதே ஆகும். இந்த முயற்சியில் பங்கேற்கும் அனைவரும், அவர்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்வில் உயர்ந்த இலக்குகளை அடைய அதிக வாய்ப்புகளைப் பெறுவர்.

இந்த திட்டம், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில் தரமிக்க நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிற்சி வகுப்பும் தனி தலைப்புகளில் 30 நாட்கள் நடக்கும். இந்த பயிற்சி திட்டம், நிபுணத்துவம் மிக்க தலைசிறந்த பயிற்சியாளர்களை வைத்து பயிற்சிகளை வழங்குவதோடு, பயிற்சி நாட்களில் பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க வேலை வாய்ப்புகளையும் வழங்குகின்றது.

தற்போது முதற்கட்டமாக 4 மாத காலத்திற்கு 1.தொழில் முனைவோர் மேம்பாடு(Entrepreneurship). 2.மனிதவள மேலாண்மை (HR),3.கணக்குகள்(Accountant), 4.கட்டிடவியல்(Civil Engineer) என்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். இதனால், தனிநபர் திறனை மேம்படுத்துதல், தலைமை பண்புகளை உருவாக்குதல், தொழில்முனைவுத்திறனை மேம்படுத்துதல், நவீன தொழிநுட்பம் மற்றும் யுக்திகளை கற்பித்தல், வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் போன்றவை இப்பயிற்சி திட்டத்தின் முக்கிய பங்காக கருதப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு (சோசியோ போடென்ட்ஸ்) Ph:6385837858 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். எனவே, இப்பயிற்சி திட்டத்தில், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் கலந்து கொண்டு, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கத்குமார் ஜெயின் IAS அவர்கள், உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சோசியோ போடென்ட்ஸ் நிறுவனர் சத்தியபிரசாந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...