துடியலூர் அருகே அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையம் ஸ்ரீ தேவி நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு திருக்குட நீராட்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் ஸ்ரீ தேவி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு திருக்குட நீராட்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் ஒரு பகுதியாக திருவிளக்கு பூஜை மற்றும் பவளக்கொடி குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் 6 அடி உயர விநாயகர் சிலை வைத்து அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கணபதி ஹோமம், திருக்குட நீராட்டு, அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் மஹா தீபராதனை ஆகியவை நடைபெற்றன.



50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையில் குத்துவிளக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, அரிசி, வளையல், பழங்கள், வெற்றிலை, பாக்கு, உதிரிபூக்கள் வைத்து பூஜைகள் தொடங்கப்பட்டன. 108 அம்மன் போற்றி பாடல்கள் பாடப்பட்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. அதன் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற பவளக்கொடி வள்ளி கும்மி நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரே மாதிரியான உடை அணிந்து வள்ளி கும்மி ஆடினர். இதனை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

இவ்விழாவிற்கு வார்டு கவுன்சிலர் ராஜாமணி தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஆறுச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், மண்டல தலைவர் புவனேஷ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ஸ்ரீ தேவி நகர் பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...