கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.  அதில் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Coimbatore: கோவை கண்ணப்பநகர் பகுதியில் உள்ள 11 to 11 டாஸ்மாக் பார் அருகே அமைந்திருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென வெடித்து தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



நேற்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பற்றிய நிலையில் சுற்றியிருந்தவர்களின் மீது தீப்பொறி சிதறியது.

இதில் மதுரை வீரன் (23) என்பவருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். காயமடைந்த மதுரை வீரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினர்.



சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மின் விநியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் கண்ணப்பநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரான்ஸ்பார்மர் வெடிப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...