கோவையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்

கோவையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 11 அன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி இன்று (செப்டம்பர் 11) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுவதையொட்டி இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் புறவழிச் சாலை, செல்வபுரம் சிவாலயா திரையரங்க சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும். காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் புறவழிச் சாலை, சிவாலயா திரையரங்க சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

உக்கடம் வழியாக திருச்சி சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் புறவழிச் சாலை வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

தடாகம் சாலையில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்எஸ்ஆர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை, ஏஆர்சி சந்திப்பு, சிவானந்தா காலனி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

விநாயகர் சிலை ஊர்வலம் வட கோவை மேம்பாலத்தையும், சென்ட்ரல் திரையரங்கத்தையும் கடந்த பிறகு வட கோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்லலாம். பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பேரூர் சாலை, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி பேரூர் புறவழிச் சாலை வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

பேரூர் சாலையிலிருந்து தடாகம் செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பு, ராம மூர்த்தி சாலை, பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம் வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி சாலை வழியாக தடாகம் சாலையில் செல்லலாம்.

விநாயகர் சிலை ஊர்வலப் பாதையான ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்தி பார்க், தெலுங்கு வீதி, சுக்கிரவார்ப்பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தெப்பக்குளம் மைதானம், பூ மார்க்கெட் சாலை, பால் மார்க்கெட் சாலை, டி.பி.சாலை, லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை, தடாகம் சாலை, பூசாரிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...