நாளை மிலாடி நபி பண்டிகை: தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் மூடப்படும்.


தமிழக அரசு, நாளை (செப்டம்பர் 17) மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 4ஆம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தெரியாததால், தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில், "செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, நாளை அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் ஆகியவை மூடப்படும். பொதுமக்கள் இந்த விடுமுறை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...