உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் நிபா வைரஸ் சோதனை செய்யாத சுகாதாரத் துறை

உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் நிபா வைரஸ் பரிசோதனை செய்யாததால் தமிழகத்தில் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.



Coimbatore: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இளைஞர் ஒருவர் பலியான நிலையில், கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதியில் சுகாதாரத் துறையினர் வாகன ஓட்டிகளை பரிசோதித்து வருகின்றனர். ஆனால், உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையான ஒன்பதாறு சோதனை சாவடியில் சுகாதாரத் துறையினர் நிபா வைரஸ் பரிசோதனை பணிகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனால் தமிழகத்திற்குள் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். உடுமலை-மூணாறு சாலை வழியாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாள்தோறும் பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர்.



கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்து அதிகம் உள்ள உடுமலை-மூணார் சாலையில் பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோய் தொற்றுடன் வருகின்ற நபர்களால் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் தொடர வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய் வந்த பின்பு கட்டுப்படுத்துவதை விட வரும் முன்பு காப்பதே சிறந்த வழிமுறையாகும் என்றும், பாதுகாப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஒன்பதாறு சோதனை சாவடியில் நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட வேண்டியது அவசியமாக உள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முறையான அறிவிப்பு வரவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...