தற்காப்புக்காக ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கிச் சூடு: கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம்

கோவையில் ரவுடி ஆல்வின் காவலர் மீது கத்தியால் தாக்கியதால், தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.



கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடும்பத்தினருக்கு நடைபெற்ற யோகா பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது, இன்று அதிகாலை கொடிசியா மைதானத்தில் ரவுடி ஆல்வின் சுட்டுப் பிடிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.



ஆல்வின் மீது 3 கொலை, 2 கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் இருப்பதாக தெரிவித்த காவல் ஆணையர், கடந்த ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆல்வின் மீது NBW (Non-bailable Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். இதையடுத்து, மூன்று, நான்கு மாதங்களாக தனிப்படை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ஆல்வினை தேடி வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரை பிடிக்கச் சென்ற போது தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடிசியா பகுதியில் ஆல்வினை காவலர்கள் பிடிக்க முற்பட்டபோது, அவர் தலைமை காவலர் ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதாக காவல் ஆணையர் கூறினார். இதனையடுத்து, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆல்வினை காலில் சுட்டதாகவும் தெரிவித்தார். தற்போது காயம் பட்ட தலைமை காவலரும் சுடப்பட்ட குற்றவாளியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...