காரமடை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை காரமடை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காரமடை அருகே சின்ன தொட்டிபாளையம் - காந்தி நகர் செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த முருகலிங்கம் (39) மற்றும் கோவை பாலத்துறையைச் சேர்ந்த சுதாகர் (29) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முருகலிங்கம் மற்றும் சுதாகர் ஆகியோர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால், கள்ளச் சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் குண்டர் சட்டத்தில் அடைக்க இன்ஸ்பெக்டர் ராஜகுமார், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி-க்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று, முருகலிங்கம் மற்றும் சுதாகர் ஆகிய இருவரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...