காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காலை முதலே அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாதரை தரிசனம் செய்தனர். விவசாயம் செழிக்கவும் உணவு பஞ்சம் நீங்கவும் வேண்டி, அரங்கநாதரின் சேவகர்களாக திகழும் தாசர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், செயல் அலுவலர் ரா.சந்திரமதி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...