'உதயநிதியை துணை முதல்வராக்குவதே திமுகவின் குறிக்கோள்' - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

திருப்பூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். போதைப்பொருள் பிரச்சினை, நாய்களின் தொல்லை, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தொட்டிபாளையத்தில் பாஜக காங்கேயம் தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.



கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் போதைப்பொருள் பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளதாகவும், இது குறித்து தான் மாநாடு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். "பள்ளியில் வகுப்பு ஆசிரியர் மாணவியை போதைப் பொருட்கள் பயன்படுத்த அழைக்கின்றார். மாணவர்கள் அதிகப்படியானோர் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். மிகவும் அபாயகரமான ஒரு சூழ்நிலையை தமிழகம் சென்று கொண்டுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாய்களின் தொல்லை குறித்தும் தமிழிசை கவலை தெரிவித்தார். "நாய்களினால் ஆடுகள் கடிக்கப்படுவது அதிகமாக இந்த பகுதியில ஆடு வளர்க்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கம் நாய்களை கட்டுப்படுத்த ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வர வேண்டும்," என்றார்.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய தமிழிசை, "பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் நல்ல திட்டங்களை எல்லாம் மாநில அரசு சரியாக எடுத்துச் செல்வதில்லை. மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் என்பதற்காகவே மாநில அரசு பாராபட்சமாக நடந்து கொள்கின்றது," என்று குற்றம்சாட்டினார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த தமிழிசை, "அவர்களுடைய ஒரே சிந்தனை உதயநிதி தான் தமிழகத்தில் துணைமுதல்வர் ஆக்குவது. போதைப்பொருட்கள் அதிகமாயிருச்சு சட்ட ஒழுங்கு கிடையாது, திருட்டு அதிகமாகிவிட்டது. முதலில் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்துங்கள் அதுக்கப்புறம் மற்றவை பாருங்கள்," என்று தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...