கோவை - தன்பாத் வாராந்திர ரயில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ரத்து செய்யப்படுகிறது

தெலங்கானாவில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - தன்பாத் வாராந்திர ரயில் செப்டம்பர் 25, 28 மற்றும் அக்டோபர் 2, 5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தெலங்கானா மாநிலம் வரங்கல் - காசிப்பேட் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - தன்பாத் வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாக செப்டம்பர் 24 அன்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் தன்பாத் - கோவை வாராந்திர ரயில் (எண்:03325) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் கோவை - தன்பாத் வாராந்திர ரயில் (எண்:03326) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் ரத்து அறிவிப்பு பயணிகளின் திட்டமிட்ட பயணங்களை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்று வழிகளை தேர்வு செய்யுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் பயண திட்டங்களை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...