'கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை' - புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன பேராசிரியர் சுப்பராயலு கருத்து

கோவையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த தேசியக் கருத்தரங்கில், கீழடி அகழாய்வு குறித்து புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் சுப்பராயலு முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.



Coimbatore: கோவை குமரகுரு கல்வி வளாகத்தில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் இன்று துவங்கியது. நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம், வானவராயர் பவுண்டேசன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த கருத்தரங்கின் நோக்கம், தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அண்மைக்கால அகழாய்வுகளில் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளைப் பகிர்ந்து கொள்வதும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கொங்கல்நகர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்விற்கு களப்பயணம் செய்வதும் ஆகும்.



கருத்தரங்கின் முதல் நாளில், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு, குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன், தொல்லியல் துறை ஆளுமைகள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன் பேசுகையில், "அகழாய்வுகள் சம்பந்தமான ஆய்வறிக்கைகள் வருவதற்கு தாமதம் ஏற்படுகிற இந்த சூழலில், அந்தத் துறை சார்ந்த ஆளுமைகளை பேசவைத்து செய்திகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலேயே, இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பதாக" தெரிவித்தார்.



புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு தனது உரையில், கீழடி அகழாய்வு குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், "கீழடியில் வீடுகள் இருந்ததற்கான அமைப்புகள் கிடைக்கவில்லை. அது ஒரு தொழில் சார்ந்த இடமாக இருந்திருக்கலாம். தொல்பொருள்களைப் பொறுத்தவரை, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருட்களோடு ஒப்பிடுகையில் கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கீழடிக்கு என்ன சிறப்பு என்று புரியவில்லை" என்று தெரிவித்தார்.



கருத்தரங்கின் தொடர்ச்சியாக, பல்வேறு தலைப்புகளின் கீழ் அமர்வுகள் நடைபெற்றன. இதில் தொல்லியல் துறை சார்ந்த ஆளுமைகள் உரை நிகழ்த்தினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...