கோவை: மதுக்கரை, சரவணம்பட்டி, செங்கதுரை பகுதிகளில் நாளை மின்தடை

கோவையில் மதுக்கரை, சரவணம்பட்டி, செங்கதுரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்டோபர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.


கோவை: கோவை மின்வாரியம் சார்பில் இன்று (அக்டோபர் 2) வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மதுக்கரை, சரவணம்பட்டி மற்றும் செங்கதுரை துணை மின் நிலையங்களில் நாளை (அக்டோபர் 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதுக்கரை துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கே.ஜி.சாவடி, பாலத்துறை, புறவழிச் சாலை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர். நகர், சுகுணாபுரம், பி.கே. புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகாஷ் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

செங்கதுரை துணை மின் நிலையத்தின் கீழ் வரும் செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த மின்தடை காரணமாக பாதிக்கப்படும் பகுதி மக்கள் தங்களது அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...