உடுமலை அருகே நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய இஸ்ரோ ராக்கெட், போர் விமானம் மாதிரிகள் கவனம் ஈர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்கள் உருவாக்கிய இஸ்ரோ ராக்கெட், போர் விமானம் மாதிரிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை பள்ளியின் அறங்காவலர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் முருகேசன், உதவி தலைவர் சாதிக்பாட்ஷா, செயலாளர் சண்முக பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கண்காட்சியில் மாணவர்கள் செய்த செய்முறை மாதிரிகள், கலைப் பொருட்கள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்களும் தங்களது கலைப் பொருட்களை காட்சிப்படுத்தினர்.



குறிப்பாக, இஸ்ரோ ராக்கெட்டுகளின் மாதிரி வடிவங்கள், போர் விமானம் மாதிரிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.





மாணவர்கள் உருவாக்கிய ரோபோடிக் அமைப்புகள், இதயம், நுரையீரல், வனவிலங்கு சரணாலயம், நீர்வீழ்ச்சி, சூரிய குடும்பம் ஆகியவற்றின் மாதிரி வடிவமைப்புகளும் பார்வையாளர்களை வியக்க வைத்தன.



பழங்கால நாணயங்கள், மண்பாண்டங்கள், மரச்சாமான்கள், பீங்கான்கள், பித்தளை மற்றும் செம்புப் பொருட்கள், எடைக்கற்கள், நவரத்தின கற்கள், ருத்ராட்ச மாலைகள், பழைய வானொலிகள், தட்டச்சு இயந்திரங்கள், தொலைபேசிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பகத் சிலம்பம் மற்றும் களரி பயிற்சிப் பள்ளியின் பழங்காலப் போர்க்கருவிகளும் இடம்பெற்றிருந்தன.

பாலைவனம், குளிர் பிரதேசம், வெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் வளரும் தாவரங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைச் செடிகள், மலர்ச் செடிகள் ஆகியவற்றின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள், "பள்ளியில் நடைபெற்ற கண்காட்சி மிகவும் பிரமிப்பாக இருந்தது. சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படும் இஸ்ரோ ராக்கெட்டுகள், போர் விமானங்கள் மாதிரிகள், பழங்கால போர்க்கருவிகள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு களித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது," என்று தெரிவித்தனர்.

ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...