கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் குழந்தை தொழிலாளர், பாலியல் தொல்லை, திருமணம் மற்றும் கடத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. மாணவர்களின் படைப்புகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டன.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. குழந்தை தொழிலாளர், குழந்தை பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் மற்றும் குழந்தை கடத்தல் ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவர்கள் தயாரித்த குறும்படங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டன.

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாவை பவுண்டேஷன் (பெண் குழந்தைகள் இல்லம்) ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட குறும்பட போட்டியில், சமூகப் பணித்துறை மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் தங்கள் கற்பனை திறனைப் பயன்படுத்தி இந்த குறும்படங்களை உருவாக்கியிருந்தனர்.

குறும்பட திரையிடல் விழாவை காவல்துறை சார்பு ஆணையாளர் டாக்டர் மணிகண்டன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் டாக்டர் வாசுகி தலைமையுரையாற்றினார். கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.



நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் சாம் சூர்யா, தற்போதைய சமூக பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு குறும்படங்களை உருவாக்கிய மாணவர்களின் முயற்சியை பாராட்டினார். இது போன்ற குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் சமூகத்தில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகளை தடுப்பதில் குறும்பட விழிப்புணர்வு மட்டுமல்லாமல், பெண் குழந்தைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியம் என்று நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. இந்த முயற்சி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...